“சித்தப்பா மேல் வந்த ஆசை” கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மனைவி… பொள்ளாச்சியை நடுங்கி போச்சு..!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

பொள்ளாச்சி அருகே தாமரைக்குளம் பகுதியில் கூலித்தொழிலாளி தேவா (27). அவரது மனைவி இந்திராணி (26). இந்நிலையில் தேவா  மாயமாகியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்த போலீசார் விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி இந்திராணியை அவரைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தேவாவைக் காணவில்லை என அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். இந்தத் தீவிர விசாரணையில், இந்திராணி தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது சித்தியின் கணவர் வினோத்குமாருடன் இருந்த கள்ளத்தொடர்புக்குத் தனது கணவர் தேவா இடையூறாக இருந்ததால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்திராணி தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி தேவாவைக் கொலை செய்துவிட்டு, எவ்வித அடையாளமும் தெரியக்கூடாது என்பதற்காக உடலைக் கரூர் ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானதை அடுத்து, காவல்துறையினர் இந்திராணி மற்றும் அவரது கள்ளக்காதலன் வினோத்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.