3-வது மாடியில் இருந்து விழுந்த லிப்ட்… மணமகன் தம்பிக்கு நேர்ந்த கதி… மகிழ்ச்சியில் முடிந்திருக்க வேண்டிய கல்யாணம்… ஒரு லிப்ட் செய்த விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on சித்திரை 8, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் எதிர்பாராத விதமாக மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில், மணமகனின் சகோதரர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் பாபு புர்வா பகுதியில் உள்ள ‘முபாரிகா’ திருமண மண்டபத்தில் உஸ்மான் என்பவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சமையல் பணிக்காகப் பயன்படுத்தப்படும் விறகு கட்டைகளை ஏற்றிக்கொண்டு மின்தூக்கி வழியாக மணமகனின் சகோதரர் ஜைனுல் என்பவர் கீழே இறங்கியுள்ளார்.

மேலும் துரதிர்ஷ்டவசமாக, மின்தூக்கியின் கம்பி திடீரென அறுந்ததால், அது மூன்றாவது மாடியில் இருந்து தரைத்தளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஜைனுல் விறகு கட்டைகளுக்கு இடையே சிக்கி ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஹேலட் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

   

“>

   

இந்நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாபு புர்வா காவல்துறையினர், திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த தற்காலிக மின்தூக்கியின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.