நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்களில் விபரீதம்… மாப்பிள்ளை கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்… பதறவைக்கும் பின்னணி..!!!

By Rajeshwari on சித்திரை 8, 2026

Spread the love

ஹைதராபாத்தில் தனது திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான அந்த இளைஞர், திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சூழலில், அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதுடன், கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இந்த விபரீத முடிவுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணக் கனவுகளுடன் இருந்த குடும்பத்தினரும் உறவினர்களும் இந்த எதிர்பாராத இழப்பால் நிலைகுலைந்து போயுள்ளனர்.

   

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சனைகள் ஏதேனும் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நடக்கவிருந்த வீட்டில் இத்தகைய துயரம் நிகழ்ந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.