சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்கள்… தனது குடியிருப்பில் இருந்து பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ வைரல்…

By Begam

Published on:

சென்னையில் நேற்று இரவு 11 மணியில் இருந்து இன்று காலை 7 மணி வரை சுமார் 8 மணி நேரங்கள் விடாமல் மழையும், காற்றும் அடித்து உள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் நேற்று 2330 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

 
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

   

சென்னையில் பெய்து வரும் இந்த வரலாறு காணாத கனமழையால் , பள்ளிக்கரணையில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சியை பிரபல முன்னணி நடிகர் ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதனை பார்த்த நெட்டிசன்கள், ‘இது சென்னை தானா..?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Rahman (@rahman_actor)

author avatar