“குழந்தையின் வாழ்க்கையோடு விளையாடாதீங்க” பைக்கில் கிருஷ்ணா வேடமணிந்த குழந்தை… பெற்றோர்களின் செயலால் கொந்தளித்த இணையவாசிகள்…!!

By Meena on ஆவணி 18, 2025

Spread the love

கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் பிறந்ததாக கதை கூறப்படுகிறது. இதில் தாய்மை அன்பு பாசம் காதல் உணர்வுகளை தாங்கி, அன்பு ஒன்றே நிலையானது என்பதை உணர்த்துகிறது. கிருஷ்ணரை தங்கள் வீட்ட குழந்தையாக நினைத்து தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து நேற்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தை ஒன்று  தன்னுடைய பெற்றோர்களுடன் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று இணைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. தன்னுடைய அப்பா வீடியோ எடுப்பதை பார்த்த அந்த குழந்தை தனது மழலை மொழியில் பேசி வருகிறது. இதனை பார்த்த பெற்றோர்கள் குழந்தை பேசுவதை பார்த்து மகிழ்ச்சியாகியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள்  “லிட்டில் கிருஷ்ணாவின் மோட்டார் சைக்கிள் பயணமா?” என கலாய்த்து  வருகிறார்கள். ஒருசிலரோ குழந்தையில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். தலையில் ஹெல்மெட் அணியாமல் இப்படி வீடியோ எடுப்பது ஆபத்தானது என்று ஒருசிலர் கருது தெரிவித்து வருகிறார்கள்.