தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த முக்கியத் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அவசர அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றுள்ளதாகவும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடாத சூழலில், அவருக்கு மத்திய அரசில் மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, தற்போதைய மத்திய இணையமைச்சர் எல். முருகன் தேர்தலில் களம் காண்பதால், அவர் வகித்து வரும் அமைச்சர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. தமிழக அரசியலில் அண்ணாமலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவரைத் தேசிய அளவில் முக்கியத்துவப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
