“அம்மா ஸ்கூல்லுக்கு போய்ட்டு வரேன்” மகிழ்ச்சியோடு சென்ற மகன்… பஸ் படிக்கட்டில் தொங்கியதால் பரிதாபமாக போன உயிர்…!!

By Soundarya on கார்த்திகை 12, 2025

Spread the love

காலையில் ஸ்கூலுக்கு செல்ல போறோம் என்ற மகிழ்ச்சியில் அப்பா, அம்மாவை பிரிந்து சென்ற 12 ஆம் வகுப்பு மாணவர் சந்தோஷ், நிரந்தரமாக அவர்களை பிரியும் நிலை ஏற்பட்டுவிட்டது. சிவகங்கை மாவட்டம் ஏனாபுரத்தை சேர்ந்த சந்தோஷ் காலை வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பியுள்ளார். பள்ளிக்கு பேருந்தில் செல்வது வழக்கம்.

அந்தவகையில் இன்று படிக்கட்டில் நின்ற படி, ஸ்கூல் பஸ்ஸில் பயணம் செய்த மாணவன், மற்றொரு பஸ் உரசியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சந்தோஷின் உடலைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர். மாணவர்களே பஸ், வேன்களில் படிக்கட்டில் பயணம் செய்வதை தயவு செய்து தவிருங்கள்.