அஃப்சல்கரில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி இரவு சுமார் 11:50 மணியளவில், பாதிக்கப்பட்ட சகோதரர்கள் தங்கள் கூட்ட அறையை மூடிக்கொண்டிருந்தபோது கும்பலாக வந்த மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலின் போது வன்முறையாளர்கள் கூர்மையான ஆயுதங்களை கண்மூடித்தனமாகப் பயன்படுத்தியதோடு, அவர்களில் ஒருவன் சகோதரர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளான் என்று புகார்தாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு சகோதரர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
https://twitter.com/IndiaToday/status/2112246353955037402/video/1
அவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக அவர் பிஜ்னோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அஃப்சல்கர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
