“விளையாட்டிற்கு எல்லைகள் இல்லை”.. இந்திய வீரர்களின் புகைப்படத்துடன் கேக் வெட்டிய பாகிஸ்தான் ரசிகர்… அதிரவைக்கும் டி20 உலகக் கோப்பை கொண்டாட்ட வீடியோ..!!!

By Rajeshwari on பங்குனி 9, 2026

Spread the love

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வரலாற்றுச் வெற்றியை உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் முஹம்மது என்ற தீவிர கிரிக்கெட் ரசிகர், இந்திய அணியின் வெற்றியைத் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அர்ஷத் தனது குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடும் இந்த வீடியோவில், இந்திய வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டுகிறார். விளையாட்டின் மீதான தனது பற்றையும், எல்லைகளைத் தாண்டிய விளையாட்டு உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக அவர் இந்திய அணியின் நீல நிற சீருடையையும் அணிந்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

   

 

View this post on Instagram

 

A post shared by Arshad Muhammad (@arshadmuhammadhanif)

   

“>

 

இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், குறுகிய நேரத்திலேயே கோடிக்கணக்கான பார்வைகளையும் லட்சக்கணக்கான விருப்பங்களையும் பெற்றுள்ளது. சில நெட்டிசன்கள் இதை வெறும் விளம்பரத்திற்காகச் செய்யப்படும் செயல் என்று விமர்சித்தாலும், பெரும்பாலான இந்திய ரசிகர்கள் அர்ஷத்தின் இந்த விளையாட்டு மனப்பான்மையைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அர்ஷத் முஹம்மது இதற்கு முன்பும் மைதானங்களில் இந்தியத் தேசிய கீதத்தைப் பாடுவது மற்றும் இரு நாட்டு வீரர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பது போன்ற செயல்களின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தச் செயல் விளையாட்டின் மூலம் இரு நாட்டு மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக அமைந்திருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.