தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் விஜய்யின் வருகை பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் (X) தளத்தில் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது பதிவில், “வாழ்த்துகள் விஜய் அண்ணா, இது ஒரு மிகப்பெரிய மற்றும் சரித்திர வெற்றி; முன்னெப்போதும் நிகழவில்லை, இனியும் நிகழப்போவதில்லை” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
