தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் உறுப்பினர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் முன்னிலை பெறுவது திமுக என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றுக் கட்சிகளில் கூட தொண்டர்கள் தான் கட்சி மாறி வருகிறார்கள். ஆனால் திமுகவில் மட்டும் அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இணைந்து வருகின்றனர். அதேபோல் அதிமுகவிலும் மாற்றுக்கட்சியினர் இணைந்து வருகிறார்கள்.
அந்தவகையில் சிவகாசி சட்டமன்ற தொகுதி பள்ளபட்டி மற்றும் திருத்தங்கல் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என மொத்தம் 50 பேர் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
