“அள்ள அள்ளக் குறையாத சம்பளம்…” டிரைவர், கண்டக்டர் இல்ல… அனுபவமே தேவையில்லை… டிகிரி, டிப்ளமோ படிச்சிருந்தா போதும்… அரசுப் போக்குவரத்துத் துறையில் செம ஆஃபர்…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர்பயிற்சி பெற விரும்பும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பிரிவுகள் மற்றும் கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை முடித்தவர்களுக்காக மொத்தம் 1,518 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி, இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், 2022 முதல் 2026 ஆம் ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பட்டதாரி மற்றும் கலைப் பிரிவு அப்ரெண்டீஸ் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,900 வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு எந்தவித முன் அனுபவமும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விவரங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

   

விருப்பமும் தகுதியும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 28.08.2026-க்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://nats.education.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். அரசுப் போக்குவரத்துத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சியைப் பெற இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.