மர்ம மரணத்தில் ‘ட்விஸ்ட்’ … வெளிவந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்… கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது அம்பலம்… ஈரோட்டில் 1 மணி நேரம் நீடித்த பரபரப்பு…!!

Spread the love

ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரம் அருகே, இரண்டு மகன்களின் தாயான சுகுணா என்ற பெண் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தௌபீக் என்ற இளைஞருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தௌபீக் வசிக்கும் காட்டூர் பகுதியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை சுகுணா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து வந்த கருங்கல்பாளையம் காவல் துறையினர் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பரிசோதனையின் முடிவில், பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, சுகுணாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் இதுவொரு கொலை என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் தௌபீக்கை உடனடியாக கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் பவானி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதோடு, இச்சம்பவம் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Gayathri

Recent Posts

அவனை விட்ருங்கடா… காதலனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு… ஓடிய திருமணமான பெண்… கணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… டெல்லியில் பரபரப்பு சம்பவம்…!

டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…

10 minutes ago

ஐயோ பாவம்… காதல் ஜோடிக்கு உதவியதற்காகக் காவு வாங்கிய பகை… விநாயகர் மண்டபத்தில் வாலிபர் படுகொலை… ஹைதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…

21 minutes ago

“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…

22 minutes ago

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

31 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

37 minutes ago

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

53 minutes ago