தங்கம் வாங்க பிளான் பண்றீங்களா?… தங்கம் மலிவாக கிடைக்கும் ‘டாப் 5’ மாநிலங்கள் பட்டியல் இதோ… லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா?… அதிர்ச்சித் தகவல்..!!!

By Rajeshwari on சித்திரை 13, 2026

Spread the love

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், நாட்டின் அனைத்து இடங்களிலும் தங்கத்தின் விலை ஒரே சீராக இருப்பதில்லை. இறக்குமதி வரி, உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டில் தங்கம் வாங்குவதற்கு கேரளா முதன்மையான இடமாக உள்ளது.

மேலும் ‘இந்தியாவின் தங்கத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில், நகைக்கடைகளுக்கு இடையிலான கடும் போட்டி மற்றும் கொச்சி போன்ற இறக்குமதி மையங்களுக்கு அருகாமையில் இருப்பதால், செய்கூலி குறைவாகவும் விலை மலிவாகவும் கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய கலைநயத்திற்குப் பெயர்பெற்ற தமிழ்நாடு மற்றும் தொழில்நுட்ப மையமான கர்நாடகா ஆகிய மாநிலங்களும் குறைந்த விலையில் தங்கம் வழங்கும் முக்கிய இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

   

இதனால் நிதித் தலைநகரான மகாராஷ்டிரா, மும்பை துறைமுகம் வழியாகத் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால், போக்குவரத்துச் செலவு குறைந்து மலிவான விலையில் தங்கத்தை வழங்குகிறது. அதேபோல், மேற்கு வங்காளம், குறிப்பாக கொல்கத்தா நகரம், அதன் நுணுக்கமான தங்க வேலைப்பாடுகளுக்காகவும், மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான கூலி காரணமாகவும் தங்கம் வாங்க சிறந்த இடமாகத் திகழ்கிறது.

   

இந்நிலையில் பல குடும்பங்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்காக மற்ற மாநிலங்களிலிருந்து கொல்கத்தாவிற்குச் சென்று நகை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறைந்த வரி விதிப்பு, போட்டி நிறைந்த சந்தை மற்றும் விநியோகச் சங்கிலி வசதிகள் ஆகியவையே இந்த ஐந்து மாநிலங்களிலும் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.