“உங்களுக்கு என்ன வேணும்…?” கையில் உணவு… வாடிக்கையாளரை கவரும் சூப்பர் ரோபோ…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 18, 2026

Spread the love

ஹரியானாவின் புகழ்பெற்ற மூர்தல் பகுதியில் அமைந்துள்ள ரேஷம் தாபாவில், உணவுகளைப் பரிமாறுவதற்கு ரோபோ வெயிட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தட்டில் வைக்கப்பட்ட சமோசாக்களை வாடிக்கையாளர்களின் மேசைக்கு இந்த ரோபோ எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவப்புக் நிற எல்இடி கண்கள் மற்றும் ஃபைபர் உடலமைப்பைக் கொண்ட இந்த ரோபோ, குறிப்பாக உணவகத்திற்கு வரும் குழந்தைகளை மிகவும் ஈர்த்து வருகிறது.

பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, ஒரு முறை சார்ஜ் செய்தால் 1.5 முதல் 2 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டது. சிறப்பு மென்பொருள் மற்றும் வழிகாட்டல் அமைப்பின் மூலம் இயங்கும் இந்த ரோபோவை தேவைக்கேற்ப ரிமோட் மூலமும் கட்டுப்படுத்த முடியும். ஏற்கனவே பொம்மை ரயில்கள் மூலம் உணவைப் பரிமாறி புகழ்பெற்ற இந்த தாபா, தற்போது ரோபோ சேவையையும் அறிமுகப்படுத்திப் பாரம்பரிய உணவக அனுபவத்திற்கு ஒரு நவீனத் திருப்பத்தைக் கொடுத்துள்ளது.