கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனி (41). இவர் ஒரு விவசாயி. இவருடைய மகள் சாரு நேத்ரா(13) காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் ஆடிக்கிருத்திகை விழா அன்று சாரு நேத்ரா வீட்டிற்கு உறவினரான பி.சி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் நீலா ஸ்ரீ , சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நீலா ஸ்ரீ , சாரு நேத்ரா மற்றும் சாருவின் நண்பர் ஆகிய 3பேரும் சேர்ந்து குளிப்பதற்காக கீழ்மத்தூர் அருகே உள்ள செட்டியார் வட்டம் ஏரிக்குச் சென்றுள்ளார்கள் . அப்போது நிலா ஸ்ரீ மற்றும் சாரு நேத்ரா ஆகிய இருவரும் திடிரென்று ஆழத்தில் சிக்கிக் கொண்டு தத்தளித்துள்ளர்கள் . இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளனர். இருப்பினும் இருவரும் அதற்குள் தண்ணீரில் மூழ்கி விட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் சிறுமிகள் மூழ்கி இறந்து விட்டனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…