அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

By Swetha on புரட்டாதி 16, 2026

Spread the love

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் ‘நம்பிக்கையின் உறுப்பு’ என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து வைத்துள்ளது. மனித உறுப்புகளின் வடிவில் ஃபைபர்கிளாஸ் கொண்டு உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சிற்பம் என்ற பெருமையைப் பெற்று, இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

பிரசித்தி பெற்ற கணேஷோத்சவ திருவிழா காலத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பண்டிகையைக் கொண்டாட லட்சக்கணக்கில் திரளும் பக்தர்களிடையே உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பல உயிர்களைக் காக்கும் உயரிய சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

   

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மருத்துவக் குழுவினரும் மாணவர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கி பக்தர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். உறுப்பு தானம் தொடர்பான மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகளைத் தகர்த்து, அது குறித்த விழிப்புணர்வு உறுதியேற்புகளைப் பெறுவதோடு, இதுபற்றி குடும்பத்தினரிடையே திறந்த மனதுடன் பேச வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.