மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் பீகாரைச் சேர்ந்த மந்திரிவாதி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் குவா என்ற நபர், தனது மனைவியின் கள்ளக்காதலை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது மனைவி மோமினா பேகம் மற்றும் அவரது கள்ளக்காதலன் சுதீப் பால் ஆகியோர் இணைந்து இமாமை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினர். திட்டமிட்டபடி, சுதீப் தொலைபேசி மூலம் இமாமை சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு வங்காளத்திற்கு வரவழைத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, சுதீப் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இமாமை கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகக் கொலை செய்து, அடையாளத்தை மறைப்பதற்காக அவரது தலையைத் துண்டித்து வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.
https://twitter.com/HateDetectors/status/2078427434823930154/photo/1
மறுநாள் செவ்வாய்க்கிழமை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த இமாமின் உடலைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வெறும் இரண்டு நாட்களுக்குள் இந்த வழக்கின் பின்னணியைக் கண்டறிந்தனர். இமாமின் மனைவி மோமினா பேகம், கள்ளக்காதலன் சுதீப் பால், அவரது இரண்டு உறவினர்கள் மற்றும் ஒரு நண்பர் உட்பட மொத்தம் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இமாமின் தலை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சிலிகுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், போலீசார் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…