“ஒரு மாதமாக ஒரே அறையில்…” இன்ஸ்டாகிராம் சாட்டிங்கால் வந்த விபரீதம்…! 16 வயது சிறுமியின் முகத்தில் சுட்டு கொன்று புதைத்த காதலன்…. உதவிய அண்ணன், மாமா… பகீர் பின்னணி…!!

Spread the love

பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவிற்குட்பட்ட கொடிஹள்ளி காவல் எல்லைக்குட்பட்ட கெம்பலநாதா கிராமத்தில், 16 வயது சிறுமி ஒருவர் அவரது மைனர் காதலனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் ஒரு வாரத்திற்குப் பிறகு தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகமாகிக் காதலித்து வந்த இந்த இரு மைனர்களும், கடந்த ஒரு மாத காலமாகத் தனியாக ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்று அந்தச் சிறுமி இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருப்பதை அவரது காதலன் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவன், சிறுமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தனது தாத்தாவின் பழைய கள்ளத்துப்பாக்கியால் சிறுமியின் முகத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர், இந்த அதிர்ச்சி குற்றத்தை மறைப்பதற்காகத் தனது 19 வயது அண்ணன் புட்டமாதா மற்றும் 40 வயது மாமா ஹரிஷ் ஆகியோரின் உதவியுடன், தங்களது விவசாய நிலத்திலேயே சிறுமியின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

சிறுமியின் விபரங்கள் தெரியாமல் தவித்த பெற்றோர் அளித்த காணாமல் போனதாக அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில் இந்த முழு விவகாரமும் அம்பலமானது. இந்த கொடூரக் கொலைக்கு உடந்தையாக இருந்த மாமா ஹரிஷ், இச்சம்பவம் குறித்துத் தனது நண்பர் ஒருவரிடம் ரகசியமாகப் பகிர்ந்துகொண்ட விஷயம் கிராமம் முழுவதும் வதந்தியாகப் பரவி, இறுதியில் போலீசாரின் காதுகளுக்கு எட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கொடிஹள்ளி போலீசார் மைனர் சிறுவன் உட்பட மூன்று பேரையும் உடனடியாகக் கைது செய்து, கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியின் உடலைத் வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சிறுமி தனது பெற்றோரிடம் தோழியின் வீட்டில் இருப்பதாகப் பொய் கூறிவிட்டு இங்கு தங்கியிருந்த நிலையில், மகளின் இருப்பிடத்தை முறையாகக் கண்காணிக்கத் தவறிய பெற்றோரின் அலட்சியமும் இந்தத் துயரத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டதாகப் மூத்த போலீஸ் அதிகாரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

6 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

6 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

6 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

6 மணத்தியாலங்கள் ago