நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் CJP அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு, தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி என்றும், “நீட் ஒழிப்பு” மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் அவர் தனது பதிவில் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வின் ஆபத்துகளை எச்சரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவர்களைக் காக்க நீட் தேர்வை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், ஸ்டாலினின் இந்த அறிக்கையில் வழக்கமாக இடம்பெறும் “ஒன்றிய அரசு”, “பாஜக” என்ற சொற்களோ அல்லது போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியின் கைது, மாணவர்கள் மீதான தடியடி குறித்த கண்டனங்களோ இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போராட்டத்தின் பின்னணியில் மத்திய அரசு மீதான விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், திமுக தலைவரின் இந்த மென்மையான போக்கு, அக்கட்சி தனது வழக்கமான கடுமையான பாஜக எதிர்ப்பு அரசியலிலிருந்து விலகிச் செல்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மாநிலத்தில் அதிகாரம் மாறிய சூழலில், தங்களை தற்காத்துக் கொள்ளவே திமுக இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கிறதோ என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
அதேவேளையில், கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டிருப்பது இந்த விவாதத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் கைது குறித்து பேரவைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய மரபைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது, பாஜக மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே ஏதேனும் புதிய அரசியல் நெருக்கம் உருவாகிறதா என்ற பேச்சை அரசியல் விமர்சகர்களிடையே தீவிரமாக்கியுள்ளது. நீட் ஒழிப்பு முழக்கத்திற்கு நடுவே அரங்கேறும் இந்த புதிய அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில்…
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த…
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக…
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இளைஞரை இரண்டு பாம்புகள் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இது AI தொழில்நுட்பத்தைப்…