அம்மாடி..! தூங்கும்போது வாய்க்குள் நுழைந்த பாம்பு… இது உண்மைதானா..? இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

ரஷ்யாவின் தாகெஸ்தான் (Dagestan) பகுதியில் உள்ள லெவாஷி (Levashi) கிராமத்தில் ஒரு பெண் தனது வீட்டுத் தோட்டத்தில் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 4 அடி நீளமுள்ள பாம்பு அவரது வாய்க்குள் நுழைந்துள்ளது. அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு மயக்க மருந்து அளித்து, உணவுக்குழாய் வழியாக ஒரு நீண்ட குழாயைச் செலுத்தி அந்தப் பாம்பை வெளியே எடுத்தனர்.

மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் தொண்டையிலிருந்து பாம்பை உயிருடன் வெளியே எடுக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூங்கும் போது வாயைத் திறந்து வைத்துத் தூங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.