இன்ஜினியரிங், டாக்டருக்கு ஒரே தேர்வு..? நீட் குளறுபடிக்கு நடுவே மத்திய அரசின் அடுத்த மாஸ்டர் பிளான்…!!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

பொறியியல் (Engineering) மற்றும் மருத்துவப் (Medical) படிப்புகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக, ஒருங்கிணைந்த ஒரே பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழ்நிலையில், தேர்வு முறைகளில் நம்பகத்தன்மையைக் கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய ஆலோசனையை முன்னெடுத்துள்ளது.

இத்தகைய ஒற்றை பொது நுழைவுத் தேர்வு முறையானது, தேர்வுகள் மீதான மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்கும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. ஒரே தேர்வு மூலம் இரு முக்கிய உயர்கல்விப் படிப்புகளுக்கான தகுதியைத் தீர்மானிப்பது, மாணவர்களின் தேர்வுச் சுமையைக் குறைக்கவும் முறைகேடுகளைத் தடுக்கவும் உதவும் என மத்திய அரசு வட்டாரங்கள் கருதுகின்றன.