ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

By Swetha on ஆவணி 17, 2026

Spread the love

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும் என ஈரான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி உதவி கோரி ஏராளமான கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்தே இத்திட்டம் உருவாக்கப்பட்டதாக ஈரானின் ராணுவத் தளபதி அமீர் ஹதாமி தெரிவித்துள்ளார். மேலும், இத்தாக்குதலை அல்லது கைது நடவடிக்கையை ஒரு பெண் மேற்கொண்டால், அவருக்கு இந்த வெகுமதித் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் ஈரானின் அரசுக்குச் சொந்தமான ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த மோதல் தீவிரமடைந்தது. போருக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கப் படைகள் எதுவும் நேரடியாக நிலைநிறுத்தப்படாத போதிலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்கள் செல்வதை ஈரான் திறம்பட தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர் பதற்ற சூழல் நிலவி வருகிறது.

   

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இருதரப்பு தலைவர்களும் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதால் இழுபறி நீடிக்கிறது. அதே வேளையில் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், ஈரானின் இந்த புதிய அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.