“பகீர்!… மாயமான செவிலியர்… பம்பை ஆற்றில் கரை ஒதுங்கிய அதிர்ச்சி… வேலைக்கு சென்ற நர்சுக்கு நேர்ந்த விபரீதம்.. ஆலப்புழாவை அதிரவைத்த ‘திடுக்கிடும்’ சம்பவம்”…!!!!

By Muthu Mani on வைகாசி 4, 2026

Spread the love

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே வேலைக்குச் சென்ற நர்ஸ் மாயமான நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவேலிக்கரையைச் சேர்ந்த தன்யா (29) என்ற பெண், திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தார். கடந்த 26-ம் தேதி மாலை வேலைக்குச் செல்வதாகக் கூறி கணவர் ரஞ்சு மூலம் பேருந்து நிலையத்தில் விடப்பட்ட தன்யா, பணிக்கு வரவில்லை என்று மருத்துவமனையிலிருந்து தகவல் வந்ததையடுத்து, அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாயமான தன்யாவைத் தேடி வந்த நிலையில், புளிக்கிழ் பகுதியில் பம்பை ஆற்றின் கரையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அது காணாமல் போன தன்யா என்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல வேலைக்குச் சென்ற பெண், மர்மமான முறையில் ஆற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

தற்போது தன்யாவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யாரேனும் அவரைத் தாக்கி ஆற்றில் வீசினார்களா? அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் ஆற்றுக்குள் குதித்தாரா? என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால், கடைசியாக அவர் யாரிடம் பேசினார் என்பதை அறிய போலீசார் அவரது அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த மர்ம மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.