தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அரசியலில் கால்பதித்த நாள் முதல் ஆளும் திமுக மற்றும் மத்திய பாஜக ஆகிய இரு கட்சிகளும் தனக்குத் தொடர்ந்து பல நெருக்கடிகளை அளித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிகார பலம் மற்றும் அரசியல் அழுத்தங்கள் மூலம் தன்னை முடக்கப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர், மக்களின் ஆதரவு இருக்கும் வரை எதற்கும் அஞ்சப்போவதில்லை எனத் தனது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் மிரட்டல்களுக்குத் தான் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும், தமிழகத்தின் நலனுக்காகத் தனது அரசியல் பயணம் தொடரும் என்றும் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் தேர்தல் மாற்றம் தேடும் மக்களுக்கும், அதிகார மிரட்டல்களுக்கும் இடையிலான போர் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஊழலற்ற மற்றும் வெளிப்படையான ஆட்சியை வழங்கத் தனக்கு ஒரு வாய்ப்பளிக்குமாறு தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
