மாரிமுத்துவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் ஸ்கூல் பாப்பா… மனதை ரணமாக்கும் காட்சி…

By Begam on செப்டம்பர் 9, 2023

Spread the love

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ‘ஏமா ஏய்’ என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது.

   

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ’கண்ணும் கண்ணும், புலிவால்’ என இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

   

 

இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.  57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது இவரது உடல் அவரது சொந்த ஊரில் ஊர்வலமாக புறப்பட்டு தகனம் செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் சிறுமி நடிகர் மாரிமுத்துவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை காணும் நம் கண்களும் மனதும் சேர்ந்தே கலங்குகின்றது. இதோ அந்த வீடியோ…