பீகாரின் கதிஹார் பகுதியில் அமைந்துள்ள படி துர்கா ஸ்தான் தசரா திருவிழாவில் எதிர்பாராத விதமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு ராட்டினங்களில் ஒன்றான ‘பிரேக் டான்ஸ்’ ராட்டினம் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தபோது, அதன் ஒரு பெட்டியிலிருந்து சிலர் திடீரென கீழே விழுந்தனர். திருவிழாக் கூட்டத்திற்கு நடுவே நிகழ்ந்த இந்த விபத்தின் நேரடிக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருக்கையின் பாதுகாப்பு பூட்டு சரியாகப் பூட்டப்படாததே இவ்விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்; மற்றொரு தரப்பினர் இருக்கையின் பகுதியே உடைந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். எனினும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை நிர்வாகத் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. நல்வாய்ப்பாக, கீழே விழுந்தவர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏதும் ஏற்படாமல் லேசான பாதிப்புகளுடன் தப்பியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…
பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம்…
தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டம், ஜட்செர்லா மண்டலத்துக்கு உட்பட்ட உத்தண்டாபூர் கிராமத்தில் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக நரசிம்ஹுலு என்ற விவசாயியின் 1.28 ஏக்கர்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீ மூலக்கரை மேலூரைச் சேர்ந்தவர் ரமேஷ். ரேடியோ செட் வாடகைக்கு விடும் தொழில்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரின் பஜ்ரங் சௌக் பகுதியில், பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 35 வயது இளைஞர் அடித்து…
கடும் குடும்ப வன்முறையும் உளவியல் அழுத்தமும் ஒரு மனிதனின் சுயமரியாதையையும் முடிவெடுக்கும் திறனையும் எவ்வாறு சிதைக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு…