வியூ சும்மா அதிருது… ரயிலின் அந்த மர்மமான இருக்கை… இத்தனை வருஷம் இது தெரியாம போச்சே… அந்த ரகசிய சீட் பற்றி உங்களுக்கு தெரியுமா?..!!!

By Rajeshwari on சித்திரை 9, 2026

Spread the love

இந்திய ரயில்வேயில் பயணம் செய்ய நாம் வழக்கமாக டிக்கெட் முன்பதிவு செய்கிறோம், ஆனால் ரயிலில் ஒரு குறிப்பிட்ட இருக்கை உள்ளது, அதற்கு டிக்கெட்டோ அல்லது முன்பதிவோ தேவையில்லை. இந்த இருக்கை பெரும்பாலும் ரயிலின் கடைசி பெட்டியில் அல்லது என்ஜினுக்கு அருகில் இருக்கும் கார்டு அமரும் இடத்தைக் குறிக்கிறது.

மேலும் இங்கிருந்து தெரியும் இயற்கை காட்சிகள் மற்றும் தண்டவாளத்தின் அழகு, ஒரு சாதாரண பயணிக்குக் கிடைக்காத மிகச்சிறந்த அனுபவத்தைத் தருகிறது. ரயிலின் வேகத்தையும், வளைந்து செல்லும் பாதையையும் மிக நெருக்கமாகவும் முழுமையாகவும் ரசிக்க இந்த இடம் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது.

   

இருப்பினும், இந்த இருக்கை அல்லது பெட்டி ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதாகும். பொது மக்கள் இங்கு அமர அனுமதி இல்லை என்றாலும், அங்கிருந்து கிடைக்கும் ‘வியூ’ எப்போதுமே பயணிகளிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

   

இது குறிப்பாக மலைப்பாதைகள் மற்றும் பாலங்களைக் கடக்கும்போது, இந்த இடத்திலிருந்து தெரியும் காட்சிகள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமையும். தொழில்நுட்ப ரீதியாக இது பாதுகாப்புப் பணிக்காக இருந்தாலும், ரயிலின் உண்மையான பயண அழகை உணர இதுவே மிகச்சிறந்த இடமாகும் என்று பலரும் கருதுகின்றனர்.