இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது Junk Foods எனப்படும் துரித உணவுகள் தான். இன்றைய காலத்தில் இளைஞர்கள் கூட Trend என்று சொல்லிக்கொண்டு நண்பர்களுடன் வெளியே செல்லும்போது இந்த Junk Foods கடைகளை தேடித்தான் செல்கிறார்கள். அதுதான் பேஷன் என்று நினைக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் திரும்பும் இடமெல்லாம் Fast Food கடைகள் தான் அதிகமாக இருக்கிறது. சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பெரிதாக மக்களுக்குள் இன்னும் வரவில்லை.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள ஒரு சில மக்கள் தொடங்கி இருக்கிறார்கள். நம் பாரம்பரிய உணவுகளுக்கு மாறி இருக்கவும் செய்கிறார்கள். ஆனால் முழுமையாக மாறிவிட்டார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வப்போது இந்த Junk Foods என்பது நம் நாக்கு கேட்கும் உணவாக மாறிப்போனது. ஆனால் இந்த உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் தீய விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கண்ணை கவரும் வகையில் இருக்கும் இந்த Junk Foods களை சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் உடல் உபாதைகள் என்பது மிகவும் அதிகம். முதலில் வயிறு பிரச்சனைகள் உருவாகும். அது மட்டுமல்லாமல் இதில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான மசாலாக்கள் மூளையில் வேதியல் மாற்றத்தை ஏற்பட செய்து மன அழுத்தம் பதட்டம் உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இந்த துரித உணவுகள் அதிக கொழுப்பு கொண்டவையாக இருப்பதால் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு மறதி போன்றவை ஏற்படுகிறது. இப்போது இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக மறதி நோய் வருவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் சில கடைகளில் உபயோகப்படுத்தும் ஆபத்தான பொருட்களின் மூலம் கேன்சர் போன்ற நோய்களும் வரலாம். அதனால் மக்கள் இப்போதைய காலகட்டத்தில் இருந்தே விழிப்புடன் செயல்பட்டு நம் பழங்காலத்து பாரம்பரிய உணவுகளை சாப்பிடும்போது நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடு வாழலாம்.
