தமிழக முதல்வர் மற்றும் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 02) செய்தியாளர்களிடம் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். “விஜய் ப்ரோ.. உங்க சக்தி எங்க ப்ரோ?” என்று வினவிய அவர், விஜய் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்ற போது அவருடைய பவர் எங்கே போனது என்று சாடினார். மேலும், திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தில் விஜய்யின் தெளிவான நிலைப்பாடு என்ன என்றும் அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) “துப்பில்லாத சக்தி” என்று கடுமையாக விமர்சித்த ஆ.ராசா, பாசிசத்தை எதிர்த்து விஜய் எப்போது பேசப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார். விஜய்யின் அரசியல் அணுகுமுறையைச் சாடிய அவர், மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன் என்றும், ஊடகங்களையும் செய்தியாளர்களையும் விஜய் எப்போது நேரடியாகச் சந்திக்கப் போகிறார் என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
