Categories: சினிமா

பணம் முக்கியமில்ல என வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்க சொன்ன ரஹ்மான்… கலைப்புலி தாணு பகிர்ந்த ஆச்சர்ய சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார். 2000 களின் இறுதிவரை அவரது படங்கள் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

80 களில் பாரதிராஜா ஒரு ட்ரண்ட் செட்டராக இருந்த நிலையில் 90 களில் சில சறுக்கல்களை சந்தித்தார். 90 களின் தொடக்கத்தில் அவர் எடுத்த கேப்டன் மகன், நாடோடித்தென்றல் மற்றும் என் உயிர் தோழன் ஆகிய படங்கள் தோல்வி அடைய ஆரம்பித்தன. அதனால் அவர் இனிமேல் அவ்வளவுதான் என்றெல்லாம் பேச்சுகள் எழ ஆரம்பித்தன. அதுமட்டுமில்லாமல் அப்போதுதான் அவர் இளையராஜாவையும் பிரிந்தார்.

அதே நேரத்தில் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த கலைப்புலி தாணு தன்னுடைய முந்தைய படங்களால் கடனில் மூழ்கியிருந்தார். அப்போதுதான் இருவரும் இணைந்து கிழக்குச் சீமையிலே படத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் முறையாக பாரதிராஜா படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்ததும் இந்த படத்தில்தான்.

இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி சூப்பர்ஹிட்டாகி இருந்தன. அப்போது ரஹ்மான் பாடல்களுக்காக இந்தியிலும் ஒரு மார்க்கெட் உருவாகி இருந்தது. அதனால் இந்தி டப்பிங் உரிமையை வாங்க 20 லட்சம் ரூபாய் முன்பணமாகக் கொடுத்துள்ளார் ஒரு தயாரிப்பாளர்.

அதை வாங்கி சந்தோஷமாக இருந்துள்ளார் தாணு. இந்த செய்தியைக் கேள்விபட்ட ஏ ஆர் ரஹ்மான் “இந்த படத்துக்காக கிராமிய பாணியில் இசையமைத்துள்ளேன். ஆனல இந்தி ரசிகர்களின் ரசனை வேறு மாதிரி. இந்த பாடல்கள் அங்கு எடுபடாது. அதனால் அந்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க.” என சொன்னார் என தாணு பகிர்ந்துள்ளார். மேலும் பண விஷயத்தில் ரஹ்மான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து… சற்றுமுன் தமிழகத்தில் பரபரப்பு…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்ற கத்திகுத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல்…

3 minutes ago

“குப்பை கொட்டப்போறேங்க”… கணவரிடம் சொன்ன கடைசி வார்த்தை… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப்…. பரபரப்பு பின்னணி…!!!

பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

6 minutes ago

பெங்களூருவில் பகீர்…! இஸ்லாமிய இளைஞரை “தீவிரவாதி” என வசைபாடிய தம்பதி…. வீட்டை முற்றுகையிட்ட மக்கள்…! பகீர் வீடியோ…!!

பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…

8 minutes ago

“சோப்பு போட்டாலும் போகாது.. பெட்ரோல் ஊற்றினாலும் அழியாது”… தேர்தல் மை பற்றி பலரும் அறியாத அதிர்ச்சியூட்டும் ரகசியம்…!

தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…

14 minutes ago

உங்க ஓட்டு கள்ள ஓட்டாயிருச்சா?.. தேர்தல் ஆணையத்தின் ரகசிய விதி…. டெண்டர் ஓட்டு பற்றி தெரிஞ்சிக்கோங்க… கள்ள ஓட்டுக்கு செக் வைக்கும் ஒரே ஆயுதம்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…

22 minutes ago

அடடே சூப்பர்!… சாக்லேட் கொடுத்து ஓட்டு போட அழைத்த ரோபோ… கோவையில் களைகட்டும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…

25 minutes ago