#image_title
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி வி பிரகாஷும், சைந்தவியும் பள்ளிக் காலம் முதலே நண்பர்கள். ஜி வி இசையமைப்பாளராக ஆனதும் சைந்தவிக்கு அதிக பாடல்களைக் கொடுத்தார்.
இதனால் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்கள் மண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து ஜி வி பிரகாஷ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு ஒரு நடிகையோடு ஏற்பட்ட தொடர்புதான் அவரது திருமண வாழக்கை முடிவுக்கு வரக் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் ஜி வி மீதான இந்த அவதூறுகளுக்கு சைந்தவி மறுப்பு தெரிவித்துள்ளார். தங்கள் விவாகரத்துக்கு எந்தவொரு வெளிநபரும் காரணமில்லை என்றும், தங்கள் இருவரும் மனமுவந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தங்களுக்கு இடையிலான நட்பும் மரியாதையும் தொடரும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த விவாகரத்து விவகாரத்தில் திருப்புமுனையாக ஒரு சம்பவம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரையும் அழைத்து ஏ ஆர் ரஹ்மான் தன் வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக சினிமா பத்திரிக்கையாளர் சுபீர் ஒரு நேர்காணலில் “ரஹ்மான் அழைத்து பேசியதால் ஜி வி மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் மனம் மாறி, தங்கள் முடிவில் இருந்து பின் வாங்கி மீண்டும் இணைந்து வாழ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இது ஜி வி மற்றும் சைந்தவி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டாவது முதல்வர் வேட்பாளர் என்ற பெருமையை…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. பல தசாப்தங்களாக திராவிடக்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக ஈரானின்…
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக…