நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு அழைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த போஸ்டரில், அன்றும் இன்றும் என இருவேறு காலகட்டங்களை ஒப்பிட்டு, “எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜெயலலிதா.. தலைவர் விஜய் அவர்களுக்கு த்ரிஷா.. என மீண்டும் வரலாறு எழுதப்படுகிறது…!” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில் பரவலாகக் காணப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
மேலும், அந்த போஸ்டரில் “தலைவரை ரசிக்கப் பலர் இருப்பார்கள்… ஆனால் தலைவரை உயிராய்க் காக்க வரலாற்றில் நிற்பவர்கள் நீங்கள் ஒருவரே…!” எனக் குறிப்பிட்டு, எங்கள் தலைமையையும் தலைவரையும் காக்க கழகப் பணியாற்ற வருக வருக என த்ரிஷாவுக்கு உரிமையோடு தவெகவினர் அழைப்பு விடுத்துள்ளனர். விஜய் மற்றும் த்ரிஷா இருவரின் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றன.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…