கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றங்களை விவரித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியா இவ்வளவு வேகமாக மாறும் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை நேரில் பார்த்தது தனக்குக் கிடைத்த அற்புதம் என்றும் அவர் அதில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அடைந்துள்ள முக்கிய மாற்றங்களாக அவர் 5 மெகா அம்சங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் முதன்மையாக, சாலையோர டீக்கடைகள் மற்றும் சிறு வியாபாரிகள் கூட க்யூ.ஆர் கோட் மூலம் நொடிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய விமான நிலையங்கள் மற்றும் நவீன முனையங்களால் போலந்திற்கு வெறும் 7 மணி நேரத்தில் நேரடி விமானத்தில் செல்ல முடிவதாகவும், எக்ஸ்பிரஸ் வேக்கள், மேம்பாலங்கள் மற்றும் மெட்ரோ ரயில் விரிவாக்கத்தால் பயண நேரம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DfCgoqFtOxA/?utm_source=ig_web_button_share_sheet
இதுதவிர, மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் சில கிளிக்குகளில் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் நவீன வாழ்க்கை முறை மற்றும் வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களுடன் மேம்படுத்தப்பட்ட இந்திய ரயில்வே ஆகியவற்றை அவர் பாராட்டியுள்ளார். இந்தியாவில் வசிக்கும் சிலருக்குத் தெரியாத நாட்டின் உண்மையான வளர்ச்சியை ஒரு வெளிநாட்டுப் பெண் சுட்டிக்காட்டி பாராட்டியுள்ள இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
