முரட்டு சிங்கிள்-லில் இருந்து பிரமோஷன் வாங்கிய பிரேம்ஜி.. மாலையும் கழுத்துமாக மணமக்களின் வைரல் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஆனி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த நடிகர் பிரேம்ஜி ஒரு வழியாக நாளை திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில் அவரின் வருங்கால மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் பிரேம்ஜி. இவர் முதன்முதலாக சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

   

   

குறிப்பாக அவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் கட்டாயம் இவரது காட்சி இருக்கும். கடந்த ஆண்டு சத்திய சோதனை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்து அசதி இருந்தார். நடிகர் பிரேம்ஜி பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரனின் இளைய மகன் ஆவார்.

 

அந்த அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது சிறந்த நடிகராக வலம் வருகின்றார். இவரை பார்த்தாலே முதலில் அனைவரும் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்போது திருமணம் என்பதுதான். ஆனால் முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜி தனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறி வந்தார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாக அவரே கூறி இருந்த நிலையில் அது காதல் திருமணம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண பத்திரிக்கை வெளியானதை தொடர்ந்து நாளை திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜி-க்கும் இந்து என்பவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கிடையில் இன்று திருத்தணி முருகன் கோயிலில் அதற்கான வேலைகளை அவரது அண்ணன் வெங்கட் பிரபு தீவிரமாக பார்த்து வந்தார் .

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி மற்றும் அவரது வருங்கால மனைவியின் புகைப்படம் இணையதில் வெளியாகி இருக்கின்றது. மாலையும் கழுத்துமாக இருவரும் இருக்கும் புகைப்படத்தை அவரது அண்ணன் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.