காதலை கைவிடாத மகள்…! உச்சகட்ட கோபத்தில் காதலனின் தந்தையை அரிவாளால் வெட்டிய கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு…!

By Devi Ramu on ஆவணி 27, 2025

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் சஞ்சய். இவர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரது மகள் கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சுதாகருக்கு தெரியவந்ததும் காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இருப்பினும் காதலை கைவிடாததால் சுதாகர் சஞ்சயை கொலை செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது சஞ்சை வீட்டில் இல்லாததால் கோபமடைந்த சுதாகர் கார்த்திக்குடன் தகராறு செய்து அவரது முகம், கை, கால்களில் அரிவாளால்  சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கார்த்திக் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருக்கும் சுதாகரை தேடி வருகின்றனர்.