அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ‘விலங்கியல் வனவிலங்கு அறக்கட்டளையுடன்’ (Zoological Wildlife Foundation) தொடர்புடைய வனவிலங்கு பாதுகாவலரான மைக் ஹோல்ஸ்டன் (Mike Holston) தனது மூக்கு வழியாக பாம்பைச் செலுத்தி வாய் வழியாக வெளியே எடுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், மைக் ஒரு உயிருள்ள மெல்லிய பாம்பின் தலைப்பகுதியைத் தனது மூக்கின் ஒரு துவாரத்தில் நுழைத்து, தொண்டை வழியாக இழுத்து வாய் வழியாக வெளியே எடுக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 5.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இவரின் இந்தச் செயலைக் கண்ட நெட்டிசன்கள், “பாம்பு தொண்டையில் சிக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?” எனப் பயத்துடனும் ஆச்சரியத்துடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான செயல்கள் உயிருக்கு உலை வைக்கும் என்பதால், நிபுணத்துவம் இன்றி எவரும் இதனை முயற்சி செய்ய வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…