“உங்கள மாதிரி ஆளுங்களால?…” ரோட்ட என்ன உங்க வீட்டு குப்பைத்தொட்டினு நினைச்சீங்களா?… மற்ற உயிர்களை பற்றி சற்றும் யோசிக்காமல் செய்த மனிதர்… வைரல் வீடியோ…!

By Visaka on ஆடி 21, 2026

Spread the love

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொறுப்பற்ற மனிதர்களின் நடவடிக்கை மற்றும் சமூகக் கட்டுப்பாடற்ற நடத்தைகள் மீண்டும் ஒருமுறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மும்பை-புனே விரைவுச்சாலையில் உள்ள லோனாவாலா மேம்பாலத்தில், காரில் வந்த நடுத்தர வயது நபர் ஒருவர், தான் குடித்து முடித்த கண்ணாடி மது பாட்டிலை பாலம் வழியாகக் கீழே உள்ள சாலையில் தூக்கி எறிந்துள்ளார். கீழே மனிதர்களோ அல்லது வாகனங்களோ செல்கிறதா என்று கூட பார்க்காமல் அவர் செய்த இந்த அலட்சியமான செயலால், அந்த பாட்டில் கீழே வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு காரின் கூரையின் மீது விழுந்து நொறுங்கியது. “கீழே சாலை காலியாக இருக்கும் என நினைத்தேன்” என்று அந்த நபர் சாக்குப்போக்கு கூறிய போதிலும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது பெரிய விபத்தோ ஏற்படவில்லை.

https://www.instagram.com/p/Da-CpOGABG3/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

   

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. “ரோட்டில் சென்றது காருக்குப் பதிலாக இருசக்கர வாகனமாகவோ அல்லது பாதசாரியாகவோ இருந்திருந்தால், இந்த வீச்சு உயிரையே பறித்திருக்கும்” என்று நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பொதுச்சாலையைத் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாக நினைக்கும் இதுபோன்ற நபர்களுக்கு எதிராகக் காவல் துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் அபராதம் மற்றும் தண்டனை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.