அட கொடுமையே… பயணத்தின் போது காத்திருந்த எமன்… லாரி மோதி கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலி… திருப்பூரில் சோகம்…!!

By Swetha on ஆடி 21, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரது மனைவி பேபி ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்களது ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தின் கடுமையான தாக்கத்தால், இருவ​ரும் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரியின் சக்கரங்கள் கீழே விழுந்த அண்ணாமலை மற்றும் பேபி ஆகிய இருவர் மீதும் ஏறி இறங்கின. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தம்பதியர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   

விபத்து குறித்துத் தகவல் அறிந்த காங்கேயம் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.