“கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?”…. டெல்லி மெட்ரோவில் பேண்ட்டை கழற்றி நபர் செய்த அருவருப்பான செயல்… வைரலாகும் வீடியோ….!

By Nanthini on தை 19, 2026

Spread the love

டெல்லி மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் நபர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் போக்குவரத்து சேவையின் முதுகெலும்பாக விளங்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில், சமீபகாலமாக பயணிகள் சிலர் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை ஒழுக்கமின்றி இத்தகைய அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களிடையே இது கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், டெல்லி மக்களிடையே பொதுநலன் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் நாகரீகமான நடத்தை (Civic sense) மிகவும் குறைவாக இருப்பதாக வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். மெட்ரோ வளாகத்தில் சிறுநீர் கழிப்பது மட்டுமின்றி, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது மற்றும் உணவுப் பொருட்களை சிதறிவிட்டுச் செல்வது போன்ற செயல்கள் மெட்ரோவின் தூய்மையை சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மெட்ரோ நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.