கொடூரத்தின் உச்சம்!.. ஒரு கார் பார்க்கிங் தகராறு… தப்பியோட முயற்சி கூட செய்யவில்லை… 3 பேர் துடிதுடித்து உயிரிழப்பு… நடுநடுங்க வைத்த துப்பாக்கிச் சூடு…!!

By Gayathri on ஐப்பசி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட சிறிய வாய்மொழித் தகராறு, திடீரென பெரும் வன்முறையாக உருவெடுத்தது. இதில் ஆத்திரமடைந்த ரிஷப் சுக்லா என்பவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த கோரத் தாக்குதலில் சகோதரர்கள் இருவரும், அவர்களில் ஒருவரது மகனும் நிகழ்விடத்திலேயே குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் ரிஷப் சுக்லா அங்கிருந்து தப்பியோட முயலாமல் அமைதியாக அங்கேயே நின்றிருந்த நிலையில், விரைந்து வந்த காவல்துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், துப்பாக்கியைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.