“ஒரே வாரத்தில் 95 பேருக்கு கடி…” பெண்ணையும் 3 குழந்தைகளையும் சூழ்ந்து கடித்த தெருநாய் கூட்டம்… வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் மக்கள்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பீடு மாவட்டம் பரலி நகரில் தெருநாய்களின் தொல்லை எல்லைமீறிச் சென்றுள்ளது. அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் தாய் மற்றும் 3 சிறு குழந்தைகளைத் தெருநாயக் கூட்டம் கொடூரமாகக் தாக்கி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரலியில் ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 95 பேர் தெருநாய்க் கடிக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இந்தத் தாக்குதல்களால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி மற்றும் கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தையும் கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர்.