Categories: சினிமா

10 கோடி செட்டில் பண்ணனும்.. வெற்றிமாறன் போட்ட கண்டிஷனால் அதிர்ச்சியடைந்த சூர்யா.. முடிவுக்கு வருமா பருத்திவீரன் விவகாரம்..

Spread the love

பருத்திவீரன் தயாரிப்பு சர்ச்சையில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கரு பழனியப்பன், சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்கள், இயக்குநர் அமீருக்கு பக்கபலமாக நின்று இந்த விஷயத்தை தீர்வு காண முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த பிரச்னை குறித்து இப்போது இயக்குநர் வெற்றிமாறன் ஒரே முடிவாக, இயக்குநர் அமீருக்கு ரூ. 10 கோடி கொடுத்து செட்டில் செய்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்ட சூர்யா, கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டோர் என்னது 10 கோடி ரூபாய் தரணுமா, என அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

#image_title

சிவக்குமார் பேமிலி கொடுத்த ஆதரவு, தைரியம் காரணமாக பொதுவெளியில் இயக்குநர் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வம்பில் மாட்டிக்கொண்டவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. மேலும், இந்த பிரச்னையை வளர்க்க கூடாது என்பதால் இப்போதைய தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்து பிரச்னையை சமூகமாக தீர்த்து வைக்குமாறு கோரியிருக்கிறார். அதில்தான் வெற்றிமாறன் தரப்பில் இருந்து அமீருக்கு ரூ. 10 கோடி கொடுங்கள் என கூறப்பட்டுள்ளது.

#image_title

ஆனால் இதை இயக்குநர் அமீர் ஏற்காமல் நான் செலவு செய்த பணம் மட்டும் தந்தால் போதும் என கூறியிருக்கிறார். அன்றைய பண மதிப்புக்கு இப்போது இந்த தொகை பெறுவதுதான் சரி என அவரை வெற்றிமாறன், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன் தரப்பு சமாதானம் செய்திருக்கிறது. இந்த சூழலில் ரூ. 10 கோடிக்கு பதில் ரூ. 5 கோடி கொடுத்துவிடுங்கள் என தயாரிப்பாளர் சங்க தரப்பில் இருந்து ஞானவேல் ராஜாவிடம் பேசியுள்ளனர். அவர் 3 கோடி ரூபாய் என்றால் உடனே செட்டில் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். எனினும் இந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் அமீர் கொடுத்துள்ள வழக்கில் கோர்ட் தீர்ப்பு வந்துவிடும். அதுவரை பொறுத்திருந்து கோர்ட் உத்தரவில் என்ன சொல்கிறதோ, அதையே செய்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள் சூர்யா, சிவக்குமார் தரப்பினர். இது இந்த பிரச்னையில் புது திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

#image_title

admin

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

15 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

20 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

24 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

28 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

32 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

33 minutes ago