#image_title
இருபதாம் நூற்றாண்டு பிறந்ததற்கு பிறகு ரோபோக்களின் ஆதிக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் வர ஆரம்பித்து விட்டது. இன்னும் வரும் காலத்தில் ரோபோக்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ரோபோக்கள் AI தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் உணர்வுபூர்வமாக இனி ரோபோக்கள் செய்யும் என்று கூறப்படுகிறது. அதன் வழியில் புதிய தொழில்நுட்பத்தில் அசத்தலான ஒரு ரோபோ வந்திருக்கிறது.
அது என்னவென்றால் இந்த ரோபோவானது மனிதர்களை தொட்டாலே போதும் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அப்படியே கூறிவிடும். “Skin Conductance” எனப்படும் தோல் கடத்துதிறன் மூலமாக ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை ரோபோகளால் கணக்கிட முடியும் என்று இதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த தோல் கடத்து திறன் மூலமாக மிக மெல்லிய மின்சாரத்தை நம் உடம்பில் பாய்ச்சுவார்கள். இந்த மெல்லிய மின்சாரம் நம் உடம்பில் சுரக்கும் வேர்வை நரம்பு செயல்பாடு போன்றவற்றை வைத்து நாம் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை இந்த ரோபோ கூறிவிடும்.
இந்த ஆய்வில் முதல் கட்டமாக 33 பேருக்கு பல்வேறு உணர்ச்சிகளை இந்த ரோபோக்கள் தோலின் தொடு திறன் மூலம் கண்டுபிடித்து இருக்கிறது. ஒவ்வொரு வகையான வீடியோக்களை பார்க்கும்போது அதன் 33 நபர்கள் சந்தோஷமாக பயமான அச்சுறுத்தும் வீடியோக்களை பார்க்கும்போது அவர்களது தோளில் ஏற்பட்ட மாற்றத்தை அந்த ரோபோக்கள் கணக்கிட்டு சரியாக கூறி இருக்கிறது.
இது நாள் வரை மனிதர்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகள், பேச்சு ஆகியவற்றை வைத்தே அவர்களது மனநிலை கண்டுபிடித்து வந்த ரோபோக்கள் இனி தோலை தொடுவதன் மூலமாகவே கண்டுபிடிக்கும் இந்த புதிய வகை ரோபோக்கள் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த ரோபோக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆய்வுகளும் நடந்து கொண்டு வருகின்றன.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…