ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் உள்ள வான்போ காவல் நிலைய நுழைவு வாயில் அருகே, புர்கா அணிந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தன் வசம் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
காவல் நிலைய வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில், அப்பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://twitter.com/aajtak/status/2117619801417977971/video/1
சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், அப்பெண்ணின் அடையாளம் மற்றும் அவர் தற்போது இருக்கும் இடம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
