அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாநிலத்தில் உள்ள மேண்டன் பகுதியில், தாய் ஒருவர் தனது சொந்தக் குழந்தைகள் மூவரின் கழுத்தை அறுத்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி, காய்லி எர்ஹார்ட் என்ற அந்தப் பெண், தனது கணவரிடமும் பாட்டியிடமும் “உங்கள் குழந்தைகளிடம் விடைபெற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறி கத்தியை காட்டி வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளார். பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, தனது 5 மாதக் குழந்தை, 3 வயதுக் குழந்தை மற்றும் 1 வயதுக் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் 5 மாதப் பாலகனும் 3 வயதுக் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 1 வயதுக் குழந்தை அறுவை சிகிச்சைக்குப் பின் உயிருக்குப் போராடி வருகிறது.இக்கொடூரக் குற்றத்தைச் செய்த தாயைக் காவல் துறையினர் கைது செய்து, இரு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றம் அவருக்கு 3 மில்லியன் டாலர் பிணைத் தொகையை (Bond) நிர்ணயித்துள்ளது. சமூகத்தில் பரவும் இத்தகைய குற்றப் செய்திகளின் தாக்கமே இத்தகைய கொடூரச் செயல்களுக்குக் காரணம் எனக் கூறிச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
