“அம்மான்னா சும்மாவா…?” மகளை நோக்கி ஓடி வந்த நாய்… துணிச்சலாக வந்து காப்பாற்றிய தாய்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், சிறுமி ஒருவரை நோக்கிப் பாய்ந்து வந்த நாய் தாக்குதல் நடத்த முயன்ற போது, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மகளைக் காப்பாற்றத் தாய் நடத்திய வீரப்போராட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு வீதியின் வழியே தாயும் மகளும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த பெரிய அளவிலான நாய் ஒன்று திடீரெனச் சிறுமியை நோக்கிப் பாய்ந்து கடிக்க முயன்றது. இதனால் உறைந்துபோன தாய், நொடிப்பொழுதில் சிறுமியைத் தனது உடலுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டு நாயின் கொடூரத் தாக்குதலைத் தன் மீது தாங்கிக் கொண்டார்.

   

நாயுடன் தாய் தனியாகப் போராடி, கிட்டத்தட்ட அனைத்து நம்பிக்கைகளும் இழக்கப்பட்ட ஆபத்தான தருணத்தில், அதை நேரில் கண்ட பாதசாரி நபர் ஒருவர் தைரியமாக ஓடிவந்து தாயையும் மகளையும் நாயின் பிடியில் இருந்து மீட்க உதவியுள்ளார். பெற்ற தாயின் ஈடு இணையற்ற பாசத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் இந்த பதைபதைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது.