அந்த காரணத்துக்காக.. பச்சிளம் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொடூரமாக கொலை செய்த தாய்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

பெங்களூரில் நிலமங்கலா நகரில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ராதா என்ற 27 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாவுக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும் பிறந்ததிலிருந்து குழந்தை பால் குடிக்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தை சாதாரணமாக இல்லை என்று நம்பிய ராதா பிரசவத்திற்கு பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். ராதாவின் கணவர் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்துள்ளார்.

விஸ்வேஸ்வர புராவில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டில் ராதா வசித்து வந்த நிலையில் அவரைப் பார்ப்பதையும் கணவர் நிறுத்திவிட்டார். இப்படியான நிலையில் நேற்று அடுப்பை பற்ற வைத்த ராதா ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி பிறகு அவர் குழந்தையை பாத்திரத்தில் வைத்துள்ளார். இதனால் குழந்தை துடி துடித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வர ராதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.