இந்தி தொலைக்காட்சி நடிகர் சோமேந்திர சோலங்கி சீனப் பெண்ணைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பொதுவாக குழந்தை இருந்தால் பெற்றோர் தூக்கத்தை இழப்பர். சோமேந்திரின் குழந்தை இரவில் அழுது கொண்டே இருந்தது. இதனால் தாத்தா சீனாவில் இருந்து நவீன எந்திரம் வாங்கி பரிசளித்தார்.
அந்த எந்திரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை போன்ற பகுதி உள்ளது. ரிமோட் மூலம் விரல்கள் தொடர்ந்து தட்டும். இதனால் குழந்தை நன்றாகத் தூங்குகிறது. பெற்றோரும் நிம்மதியாக உறங்குகின்றனர். சோமேந்திர் இதை வீடியோவாக பகிர்ந்தார். இந்த வீடியோ 9 லட்சம் லைக்ஸ்களை பெற்று வைரலானது.
View this post on Instagram
