#image_title
திருச்செந்தூரில் தற்போது கடந்த ஒரு வாரமாக வெகு விமர்சையாக நடந்து வரும் ஒரு நிகழ்வு கந்த சஷ்டி. முருகப்பெருமாள் சூரபத்மனை வதம் செய்த நாள் தான் கந்தசஷ்டி ஆக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு ஆறு நாட்கள் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. கந்த சஷ்டியின் ஏழாவது நாள் சூரபத்மனை சுரசம்காரம் செய்யும் நிகழ்வு திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும். எட்டாவது நாள் திருகல்யாண வைபவம் நடைபெறும்.
இந்த கந்த சஷ்டி விரதம் ஆனது மிகவும் பிரசித்தி பெற்றது. அசுரனின் அரசனான சூரபத்மன் தேவர்களை முனிவர்களையும் கொடுமைப்படுத்தும் போது அவர்களை வதம் செய்வதற்காக திருச்செந்தூரில் படைவீடு அமைத்து முருகப்பெருமான் போர் செய்தார். அவனுடன் ஏழு நாட்கள் போர் புரிந்தார். முருகப்பெருமாள் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரதமிருந்தனர். இதன் காரணமாகவே 7 நாட்களும் விரதம் அனுசரிக்கப்படுகிறது.
குழந்தை வரம் வேண்டுவோர் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவோர் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் இந்த கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கின்றனர். சூரசம்காரம் நடக்கும் நிகழ்வு கண்ணால் கண்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறார்கள். இந்த ஏழு நாட்களும் திருச்செந்தூரில் கடும் பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அனைவரும் திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசிப்பதை சிறந்த பாக்கியம் என்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 18 வருடங்களுக்கு அடுத்து முருகப்பெருமானுக்கு வைரவேல் சாத்தி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த வைர வேலை காண பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பூரிப்புடன் கண்டு ரசித்து செல்லுகின்றனர்.
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…